ரிஷப் பண்ட்டின் இடத்தை அபகரித்த நினைத்ததில்லை… இளம் வீரர் கருத்து!
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவாகி வருகிறார் இஷான் கிஷான்.
தோனிக்குப் பிறகு சில ஆண்டு போராட்டத்துக்குப் பின் இப்போது இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக இருக்கிறார் ரிஷப் பண்ட். இந்நிலையில் அணிக்குள் தனக்கான இடத்தை தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கும் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கிறார் இஷான் கிஷான்.
இந்நிலையில் பண்ட் உடனான நட்புக் குறித்து பேசியுள்ள கிஷன் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஒன்றாக இருக்கும்போது நிறைய படங்கள் பார்க்கிறோம். என்றும் அவர் இடத்தைப் பறித்துக்கொள்ள நான் நினைத்ததில்லை. அதுபோலவே அவரும் என எனன்னால் உறுதியாக சொல்லமுடியும். நாங்கள் எங்களை போட்டியாகக் கூட நினைப்பதில்லை எனக் கூறியுள்ளார்.