வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (16:23 IST)

வலிமை ஓடிடி ரிலிஸ் தேதி பற்றி வெளியான தகவல்… திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி!

நாளை மறுநாள் வெளியாக உள்ள வலிமை திரைப்படத்துக்கு உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. கடைசியாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெளியாகி இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகிறது. அஜித் என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதுவரை அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்த எந்த படமும் பெரிய வெற்றி பெற்றதில்லை என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் திரையரங்கில் வெளியாகி 15 நாட்களிலேயெ இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறதாம். இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக் சொல்லப்படுகிறது. ஆனால் தயாரிப்பாளர் போனி கபூர் அந்த தகவல் பொய்யானது என்றும் திரையரங்கில் வெளியாகி 21 நாட்களுக்குப் பிறகே வெளியாகும் என உறுதியளித்துள்ளாராம்.