செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (09:11 IST)

ஒரே ஊர்ல இருந்தும் காதலிய பாக்க முடியல – சோகத்தில் விக்னேஷ் சிவன்!

நயன்தாரா நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அண்ணாத்த படக்குழுவினர் அனைவரும் பயோ பபுளில் உள்ளனர். இப்போது படப்பிடிப்பில் நயன்தாராவும் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பும் சமந்தாவை வைத்து ஐதராபாத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே ஊரில் இருந்தாலும் நயன்தாரா பயோ பபுளில் இருப்பதால் விக்னேஷ் சிவனை சந்திக்க முடியாதாம்.