செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (06:15 IST)

முடிவுக்கு வருகிறதா ஒருநாள் போட்டி தொடர்?

இருநாடுகளுக்கு இடையே நடைபெறும் ஒருநாள் போட்டி தொடரை முடிவுக்கு கொண்டு வரவும் அதற்கு பதிலாக ஒருநாள் கிரிக்கெட் லீக் முறையை நடைமுறைப்படுத்தவும் ஐசிசி தீவிர முயற்சி செய்து வருகிறது. அனேகமாக தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா ஐந்து ஒருநாள் போட்டித்தொடர்தான் கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது.



 
 
ஐசிசி கிரிக்கெட் லீக் என்பது 13 அணிகளும் ஒன்றுடன் ஒன்று மோது போட்டி தொடர் ஆகும். ஒரு அணி இன்னொரு அணியுடன் சொந்த மண்ணில் ஒருமுறையும், வெளிநாட்டு மண்ணில் ஒருமுறையும் மோத வேண்டும். இதில் வெற்றி பெறும் அணி காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி என தகுதி பெறும்
 
இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் இருநாடுகளிடையே நடைபெறும் ஐந்து ஒருநாள் போட்டி தொடர் இனி இருக்காது என்றே கருதப்படுகிறது. அதிகபட்சம் இனி மூன்று போட்டிகள் கொண்ட தொடராகவே இருக்கும் என கருதப்படுகிறது.