ஐபிஎல் டிக்கெட் விற்பனை ஆரம்பம்: களைகட்டும் சேப்பாக்கம்!!
12 ஆவது ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது.
இந்தியாவில் இந்த ஆண்டு எப்ரல் முதல் மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்க இருப்பதால் பாதுகாப்புக் காரணங்களால் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் பிரச்சனைகள் ஏற்பட்டன. அதனால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்பிரிக்கா அல்லது துபாயில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே இதுபோல 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகள் பாராளுமன்றத் தேர்தலின் போது வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன.ஆனால் பிசிசிஐ இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என அறிவித்து இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இம்மாத இறுதியில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. முதல் போட்டி சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸுக்கும் இடையில் நடக்க இருக்கிறது. 23 ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொங்கியது.
டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் சீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர். டிக்கெட் வாங்க நேற்று இரவிலிருந்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சென்னை போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூபாய் 1300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2500,5000,15000 ஆகியவைகளிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.