வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 21 மார்ச் 2019 (09:04 IST)

ஐபிஎல் டிக்கெட் வருவாய் – ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு உதவி !

ஐபிஎல் முதல் போட்டி சென்னையில் வரும் மார்ச் 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

12 ஆவது ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கின்றன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இதற்கான டிக்கெட் விற்பனை இப்போது நடந்து முடிந்துள்ளது.

இதையடுத்து சென்னை அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் என்.சீனிவாசன் ’மார்ச் 23 ஆம் தேதி நடக்கும் போட்டியின் மொத்த டிக்கெட் வருவாயும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி ஆர் பி எஃப் வீரர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

புல்வாமாத் தாக்குதலை அடுத்து ஐபிஎல் தொடக்க விழாவை பிசிசிஐ ரத்து செய்துள்ளது. அதுபோல ராணுவ வீரர்களின் மறைவை ஒட்டி ஆஸ்திரேலியாவிற்கு எதிரானப் போட்டியில் ராணுவத் தொப்பி அணிந்து இந்திய அணி விளையாடி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.