1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஏப்ரல் 2023 (15:04 IST)

இங்கிலாந்து வீரர்களுக்கு ஆண்டு ரூ.50 கோடி: ஐபிஎல் அணிகள் விருப்பம்

இங்கிலாந்து வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 50 கோடி ரூபாய் சம்பளம் தர ஐபிஎல் அணிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்து அணியில் உள்ள வீரர்கள் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை எடுத்து வருகின்றனர் என்பதும் அதனால் இங்கிலாந்து வீரர்களை ஏலம் எடுக்க ஐபிஎல் அணிகள் போட்டி போட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடும் இங்கிலாந்து வீரர்களில் ஆறு பேருக்கு ஆண்டுக்கு 50 கோடி தர ஐபிஎல் அணிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் நடத்தப்படும் கவுண்டி போட்டிகளில் தரும் சம்பளத்தை விட இங்கிலாந்து வீரர்களுக்கு ஐபிஎல் அணியின் நிர்வாகங்கள் அதிக சம்பளம் தர முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva