செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஏப்ரல் 2023 (12:15 IST)

ஐ.பி.எல். தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் திடீர் விலகல்: என்ன காரணம்?

washington sundar
ஹைதராபாத் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான வாஷிங்டன் சுந்தர் திடீரென ஐபிஎல் போட்டியிலிருந்து விலகி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை 36 போட்டிகள் முடிவடைந்து நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் திடீரென ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.
 
அவருக்கு கால் தொடை பகுதியில் ஏற்பட்ட காரணம் காரணமாக அவர் சிகிச்சை பெற இருப்பதாகவும் அதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited  by Siva