திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 மே 2023 (08:03 IST)

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.. அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை..!

சென்னை புறநகர் பகுதியில் இன்று அதிகாலை முதல் கன மழை வெளுத்து வாங்குவதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் வெயில் கொளுத்தி வரும் நிலையில் வெப்ப அனலை தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியில் இருந்தனர். அவ்வப்போது மின்சார தடையும் ஏற்பட்டதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்தில் இருந்ததாக செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென சென்னை புறநகர் பகுதியில் கன மழை வெளுத்து வாங்குவது. குறிப்பாக ஊரப்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது
 
மேலும் சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளதால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva