வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 14 நவம்பர் 2022 (09:30 IST)

உலகக் கோப்பை தொடரின் சிறந்த வீரர்கள் அடங்கிய அணியை அறிவித்த ஐசிசி… எத்தனை இந்திய வீரர்கள்?

நேற்றுடன் ஐசிசி உலகக்கோப்பை 2022 தொடர் முடிவடைந்தது. இந்த முறை சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்து அணி தட்டிச் சென்றது.

கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த டி 20 உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி  விக்கெட்டுகளை இழந்தாலும் நிதானமாக விளையாடியது.

அதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி இலக்கை 19 ஆவது ஓவரில் அடைந்து இரண்டாவது முறையாக டி 20 சாம்பியன் ஆனது. இந்நிலையில் இந்த தொடர் முழுவதும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்த வீரர்கள் அடங்கிய ஐசிசி 11 அணியை வெளியிட்டுள்ளனர். அதில் கோலி, சூர்யகுமார் மற்றும் அர்ஷ்தீப் ஆகிய மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசி 11 அணி
ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், க்ளென் பிலிப்ஸ், ஷதாப் கான், ஷாகீன் அப்ரிடி, சிக்கந்தர் ராசா, ஆண்ட்ரூ நோர்ட்யே, மார்க் வுட், அர்ஷ்தீப் சிங்