ஐபிஎல் அட்டவணை வெளியீடு: முதல் போட்டி சென்னை vs மும்பை
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் போட்டிகள் 11வது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்காக 8 அணிகள் ஏற்கனவே தயாராகவுள்ளது. இந்த நிலையில் 11வது ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி முதல் போட்டி ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் மே 27ஆம் தேதி இறுதிப்போட்டியும் மும்பையில் தான் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.