1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (15:24 IST)

குகைக்குள் 15 வருடங்கள் கற்பழிப்பு, கருகலைப்பு: மந்திரவாதி பிடியில் இளம்பெண்..

இந்தோனேசியாவில் குகை ஒன்றில் 15 வருடமாக இளம்பெண் ஒருவர் மந்திரவாதியின் பிடியில் சிக்கி பாலியல் தொல்லைக்கு உள்ளானது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 
இந்தோனேசியாவில் வசிக்கும் தம்பதியினர் ஒருவர் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தங்களது மகளை பேய் விரட்டும் மந்திரவாதியிடம் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். ஆனால், அதன் பிறகு அவர்களது மகளை காணவில்லை.
 
இதுகுறித்து மந்திரவாதியிடம் கேட்ட போது, உங்களது மகள் வேலை தேடி ஜகார்த்தா நகருக்கு சென்று விட்டாள் என கூறியுள்ளார். மந்திரவாதியின் பேச்சை கேட்டு அந்த தம்பதியினர் மகளை தேடவில்லை. 
 
இந்நிலையில் சமீபத்தில், மந்திரவாதியின் வீட்டிற்கு அருகே இருந்த குகை ஒன்றில் இருந்து 28 வயது இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டார். அப்போதுதான் தெரியவந்தது இவள்தான் அந்த தம்பதியினரின் மகள் என்று. 
 
கடந்த 15 வருடங்களாக அந்த இளம்பெண்ணை ஏமாற்றி, குகைக்குள் மறைத்து வைத்துள்ளார். பகலில் குகையிலும், இரவில் மந்திரவாதியின் வீட்டிற்கு அருகே உள்ள குடிசையில் அந்த பெண் தங்கி இருந்துள்ளார்.
 
குகைக்குள் தங்கி இருந்த 15 வருடங்கள் அந்த பெண்ணை மந்திரவாதி கற்பழித்து உள்ளார். மேலும், கர்ப்பம் ஆகாமல் தடுக்க பலமுறை மருந்து கொடுத்தும் உள்ளார். 
 
இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மந்திரவாதி குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் 15 வருட சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.