1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (15:13 IST)

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்! இறுதிப்போட்டியில் சாதித்த இந்தியா!

Air Rifle Squad
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதி போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளது.

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜானில் நடந்து வந்தது. இதில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளின் அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனைகள் இளவெனில் வாலறிவன், ஸ்ரெயா அகர்வால், ரமிதா ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இறுதி போட்டியில் இந்த அணி டென்மார்க் அணியுடன் மோதிய நிலையில் 17-5 என்ற பாயிண்ட் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது. உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.