செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (18:35 IST)

ஒரே ஒரு சண்டைக்காட்சிக்கு 40 கோடி ரூபாய் – பரபரப்பில் இந்தியன் 2 குழு !

கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்துக்கான உருவாக்கபடவுள்ள ஒரு சண்டைக்காட்சிக்காக 40 கோடி ரூபாய் செலவழிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல் ஷங்கர் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு சில பல காரணங்களால் நிறுத்தப்பட்டு இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இதையடுத்து விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்புக்காக அடுத்த கட்டமாக போபாலுக்கு செல்ல இருக்கிறது படக்குழு.

இந்த சண்டைக்காட்சியில் மட்டும் மொத்தமாக 2000 துணைக்கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த ஒரே ஒரு சண்டைக்காட்சிக்காக 40 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த காட்சியை ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கவுள்ளார்.

இந்தியன் 2 வில் கமலுடன் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், விவேக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய,ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள முதன் முறையாக ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.