வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (18:07 IST)

காலி மைதானங்களில் விளையாடுவது இந்திய வீரர்களுக்கு சவால்! முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து!

ஐபிஎல் போட்டிகள் ஆளில்லாத காலி மைதானத்தில் நடக்க இருப்பது இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என நியுசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் ஏற்கனவே அரபு அமீரகம் சென்றடைந்துள்ளன. அங்கு வீரர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, வீரர்கள் அனைவரும் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த முறை ஐபிஎல் தொடர் முழுவதும் ஆளில்லாத காலியான மைதானத்தில் நடக்க உள்ளன.

இதுகுறித்து பேசியுள்ள நியுசிலாந்து வீரர், ஸ்காட் ஸ்டைரிஸ் ‘ஆளில்லாத மைதானங்களில் விளையாடுவது மற்ற நாட்டு வீரர்களை விட இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும். ஏனென்றால் மற்ற நாட்டு வீரர்கள் காலியான மைதானம் அல்லது குறைவான எண்ணிக்கை கொண்ட மைதானங்களில் விளையாடி உள்ளனர். ஆனால் இந்திய மைதானங்களோ மிகப் பெரியது. இதனால் ரசிகர்கள் மூலம் கிடைக்கும் உற்சாகம் அவர்களுக்குக் கிடைக்காது’ எனக் கூறியுள்ளார்.