வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 14 ஏப்ரல் 2018 (11:41 IST)

குத்துச்சண்டை போட்டி - 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்திய இந்திய வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் ஆண்களுக்கான  குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் அமிட், மணிஷ் கவுஷிக்  ஆகியோர் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் ஆண்களுக்கான 46-49 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில்  இங்கிலாந்து வீரர் கலால் யபாயை எதிர்கொண்ட  இந்திய வீரர் அமிட், 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 
 
அதேபோல் ஆண்களுக்கான 60 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஹாரி கார்சைட்டை எதிர்கொண்ட இந்திய வீரர் மணிஷ் கவுஷிக் 3-2  என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 
 
இதன்மூலம் இந்தியா 20 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்கள் வென்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.