வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 14 ஏப்ரல் 2018 (08:52 IST)

தங்கம் வென்ற மேரிகோமுக்கு குவியும் பாராட்டுக்கள்

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீராங்கனை மேரிகோம், காமன்வெல்த் 48 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்றார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.
 
இந்த நிலையில் தங்கமங்கை மேரிகோமுக்கு இந்தியாவின் பிரபலங்கள் வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மேரிகோமுக்கு தங்கள் டுவிட்டர்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
அதேபோல் கிரிக்கெட் வீரர் சேவாக், முகம்மது கைப், பாலிவுட்நடிகர் அக்சயகுமார், உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் எனக்கு கிடைத்த இந்த தங்கப்பதக்கத்தை என்னுடைய மூன்று மகன்களான ரெச்சுங்வார், குப்நெயார் ம்ற்றும் பிரின்ஸ் ஆகிய மூவருக்கும் சமர்ப்பணம் செய்வதாக மேரிகோம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் பயிற்சியாளர்கள், உள்பட பதக்கம் பெற ஒத்துழைத்த அனைவருக்கும் எனது நன்றி என்று தெரிவித்துள்ளார்,.