சாம்பியன்ஷிப் கோப்பை: இந்தியா அபார வெற்றி, அரையிறுதிக்கும் தகுதி பெற்றது
ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பையின் முக்கிய போட்டியான இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணியை தோற்கடித்த இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி வங்கதேச அணியுடன் அரையிறுதியில் மோதவுள்ளது.
இன்ரைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல், 44.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர் டீ காக் மட்டுமே ஓரளவு நிலைத்து ஆடி 53 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் புவனேஷ்குமர், பூம்ரா தலா இரண்டு விக்கெட்டுக்களையும் அஸ்வின், பாண்ட்யா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
இந்த நிலையில் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி 38 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றடு. தவான் 78 ரன்களும், விராத் கோஹ்லி 76 ரன்களும், யுவராஜ் 23 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.