வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (14:37 IST)

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
தென்னாப்பிரிக்காவில் உள்ள செஞ்சூரியன் மைதானத்தில் இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
 
இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களான கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களத்தில் இறங்கி விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய அணி சற்று முன் வரை 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் கேஎல் ராகுல் 16 ரன்களும் மயங்க் அகர்வால் 26 ரன்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது