422 ஆக அதிகரித்த ஒமிக்ரான் பாதிப்பு; மகாராஷ்டிரா முதலிடம்! – இந்திய நிலவரம்!
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 422 ஆக உயர்ந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் இதுவரையிலான மொத்த கொரோனா பாதிப்புகள் 422 ஆக பதிவாகியுள்ளன. இதில் 130 பேர் குணமாகியுள்ளனர். மாநில அளவிலான ஒமிக்ரான் பாதிப்பில் 108 பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. டெல்லியில் 79 பாதிப்புகளும், குஜராத்தில் 43 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் இதுவரை 34 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.