திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (11:08 IST)

இந்தியா உறுதி அளிக்காவிட்டால் இடத்தை மாற்றுங்கள்… பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கருத்து!

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா உறுதி செய்யவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்கள் இந்தியாவில் நடக்க உள்ளன. இதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் இருக்காது என ஐசிசி உறுதியளிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் இப்போது விசா வழங்குவோம் என உறுதி அளிக்காவிட்டால் உலகக்கோப்பைத் தொடரை வேறு நாட்டுக்கு மாற்றுங்கள் என கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இஷான் மானி அந்நாட்டு ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.