1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 ஜூன் 2023 (15:52 IST)

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுக்கள்.. கைவிட்டு போகிறதா டெஸ்ட் கோப்பை..?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் ஒரே ஓவரில் விராட் கோலி மற்றும் ஜடேஜா விக்கெட்டுகள் விழுந்துவிட்டதை அடுத்து இந்திய அணியை விட்டு கோப்பை நழுவி செல்கிறதா என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 469 மற்றும் 270 ரன்கள் அடித்திருந்த நிலையில் முதலில் 296 ரன்கள் அடித்த இந்தியாவுக்கு 444 என்ற இலக்கு அளிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்றைய நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. 
 
இன்றைய ஆட்டத்தில் போலந்து ஓவரில் விராட் கோலி மற்றும் ஜடேஜா அடுத்தடுத்து அவுட் ஆகினர். இந்த நிலையில் தற்போது இந்திய அணி 185 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து உள்ளது. இன்னும் இந்தியா அணி வெற்றி பெற 259 ரன்கள் தேவை என்ற நிலையில் ரகானே மற்றும் பரத் ஆடி வருகின்றனர்.
 
Edited by Siva