வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (20:13 IST)

25 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்கள்: பேட்டிங்கில் திணறும் இந்திய அணி

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சற்றுமுன் தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர்  முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கவுள்ளது
 
தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயாங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கிய நிலையில் 5வது ஓவரில் மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். இதனையடுத்து அதே ஓவரில் புஜாராவும் ஆட்டமிழந்ததால் இந்திய அணியினரிடையே பதட்டம் ஏற்பட்டது
 
இதனையடுத்து கேப்டன் விராத் கோஹ்லி களமிறங்கினார். இவர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் வீழ்ச்சியை நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8வது ஓவரில் கேப்ரியல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 25 ரன்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. மே.இ.தீவுகளின் ரோச் இரண்டு விக்கெட்டுக்களையும் கேப்ரியல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
 
தற்போது கே.எல்.ராகுல் 7 ரன்களுடனும், ரஹானே ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.