1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 26 ஜனவரி 2017 (11:44 IST)

முதல் டி20 இன்று தொடக்கம்: வெற்றிக்கு ஆயத்தமாகும் இந்தியா- இங்கிலாந்து!!

இந்தியா-இங்கிலாந்து இடையேயான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் கான்பூரில் இன்று தொடங்குகிறது.


 
 
மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 
 
இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும், 5 டெஸ்ட் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.
 
டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் முத்திரை பதித்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கொல்கத்தாவில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இருந்ததால் இங்கிலாந்து அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.
 
இன்றைய ஆட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.