தொடர்புடைய செய்திகள்
- சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..
- போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!
- பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்
- 14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!
- 2 பேரும் செய்தது ஒரே தவறுதான்.. ஆனால் ஸ்ரேயாஸ்க்கு ரூ.24 லட்சம், ஹர்திக்கிற்கு ரூ.30 லட்சம் அபராதம்..!
கோப்பையை வென்றால் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது… ஐபிஎல் தலைவர் வேண்டுகோள்!
கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்த 18 ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடக்கவுள்ளது.. ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் லீக் போட்டிகளில் முதலிரண்டு இடங்களைப் பிடித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இவையிரண்டுமே இதுவரைக் கோப்பையை வெல்லாத அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளில் கோலி இடம்பெற்றிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கே பெருமளவுக்கு ஆதரவு உள்ளது. ஏனென்றால் கோலி கடந்த 17 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக விளையாடியும் அவரால் இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது. இதனால் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல முன்னாள் வீரர்கள் கூட இந்த முறை ஆர் சி பி அணி கோப்பையை வெல்லவேண்டும் என ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் தலைவர் அருண் துமால் கோலிக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் “ஒருவேளை இந்த சீசனில் ஆர் சி பி அணிக் கோப்பையை வெல்லும் பட்சத்தில் அவர் ஓய்வை அறிவித்துவிடக் கூடாது. தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடவேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் கோலி திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வறித்த நிலையில் ஐபிஎல் போட்டிகளிலும் கோப்பையை வென்றதும் ஓய்வை அறிவித்து விடுவாரோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.