புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 நவம்பர் 2018 (07:21 IST)

சென்னை டி-20 போட்டி: கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி

இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டி தொடரில் ஏற்கனவே இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்ட நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றாவது டி-20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

மேற்கிந்திய தீவுகள் அணி: 181/3

பூரன்: 53 ரன்கள்
பிராவோ: 43 ரன்கள்

இந்திய அணி: 182/4

தவான்: 92
ரிஷப் பண்ட்: 58 ரன்கள்

ஆட்டநாயகன்: தவான்

நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் 4 பந்துகளில் இந்திய அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐந்தாவது பந்தில் தவான் அவுட் ஆனதால் போட்டி டையில் முடிந்துவிடுமா? என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் 6வது பந்தில் ரிஷப் பண்ட் ஒரு ரன் எடுத்து இந்தியாவை வெற்றி பெற செய்தார்.