செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By VM
Last Updated : ஞாயிறு, 11 நவம்பர் 2018 (14:42 IST)

ரொமான்ஸ் மட்டுமே! திருமணம் இல்லை: சுஷ்மிதா சென் டுவிட்

பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தன்னைவிட 16 வயது குறைந்த இளைஞரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. 
 
ஆனால் இதை சுஷ்மிதா சென் மறுத்துள்ளார். தற்போதுதான் ரொமான்ஸ் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
தமிழில் ரட்சகன் படம் மூலம் அறிமுகமானவர் சுஷ்மிதா சென். இவர் முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி என்ற பாடலுக்கு நடனமாடினார். இந்தியா சார்பில் முதல் முறையாக பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற வரும் இவரே. 
 
ஹைதராபாத்தை சேர்ந்த சுஷ்மிதா சென்னுக்கு தற்போது வயது 42 ஆகிறது. ரெணி, அலிசா என்ற இரண்டு பெண்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், சுஷ்மிதா சென் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோமன் ஷா என்பவரை காதலித்து வருகிறார். அவரை விரைவில் சுஷ்மிதா சென் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அண்மையில் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. 
 
இந்நிலையில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள சுஷ்மிதா சென், இந்த உலகம் என்னுடைய திருமண செய்தியை எதிர்பார்க்கிறது. ஆனால் எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. என்னை பற்றிய வதந்திகள் இறந்து போகும். தற்போது நான் ரோமனுடன் ரொமான்ஸில் மட்டுமே இருக்கேன்  இவ்வாறு கூறியுள்ளார்.