புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 11 நவம்பர் 2018 (17:20 IST)

கவர்ச்சிக்கு ஒகே! நயன்தாராவாக ஆசைப்படும் அதிதி மேனன்

பட்டதாரி படம் மூலம் அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் அதிதி மேனன். அடுத்து அமீர் இயக்கத்தில் ஆர்யாவுடன் சந்தனதேவன் படத்தில் நடிக்கிறார்.

அவர் அட்டகத்தி தினேசுடன் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை படம் வெளியாகி உள்ளது. அவர் ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டி அளித்தார். அதில் அதிதி மேனன் கூறியிருப்பதாவது:
 
" சினிமாவுக்குள் திடீரென வந்தேன். களவாணி மாப்பிள்ளை எனக்கு நான்காவது படம். ஆனால் இரண்டாவதாக ரிலீஸ் ஆகியிருக்கிறது. எனக்கு எல்லா மாதிரியான கதாபாத்திரங்களிலும் நடிக்க பிடிக்கும். சந்தனதேவன் ரிலீஸ் ஆவதற்கு தாமதமாவதால், என்னுடைய முகத்தை வெளி உலகுக்கு தெரியப்படுத்துவதற்கு ஒரு கமர்சியல் படம் தேவைப்பட்டது. அதனால் தான் களவாணி மாப்பிள்ளை படத்தில் நடித்தேன். அதற்காக கமர்சியல் படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்றில்லை. எல்லா படங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். எல்லாவற்றையும் பரிசோதனை செய்ய தான் நான் விரும்புகிறேன்.
 
களவாணி மாப்பிள்ளை படத்தில் நான் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அதேசமயம் கவர்ச்சி வேடத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன். என்னை பொறுத்தவரை கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை. அர்ஜூன் ரெட்டி போன்ற படங்களில் குடும்பப்பாங்காக தான் நடிப்பேன் என சொல்ல முடியுமா. அது போன்ற படங்களில் நடிக்கவும் விரும்புகிறேன். 
 
எனக்கு நயன்தாரா தான் ரோல் மாடல். அவரை போல உயர வேண்டும் என்பது தான் எனது ஆசை. அந்த இடத்துக்கு வந்துவிட்டால் நமக்கு தேவையான கதாபாத்திரத்தை நாமே தேர்வு செய்யலாம்" இவ்வாறு அவர் கூறினார்.