1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 15 நவம்பர் 2023 (16:02 IST)

ரோஹித் சர்மா விட்ட தூது.. ரிட்டர்யர்ட் ஹர்ட் ஆகி வெளியேறிய சுப்மன் கில்..!

subman gill
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று முதலாவது அரை இறுதி போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. 
 
சற்றுமுன் இந்திய அணி 26 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது.  ரோகித் சர்மா  47 ரன்கள் எடுத்த அவுட்டான நிலையில் சுப்மன் கில்79 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு கட் ஆகி வெளியேறினார். 
 
சுப்மன் கில் ரிட்டர்யர்ட் ஹர்ட் ஆவதற்கு ஒரு ஓவருக்கு முன்பு அஸ்வின் தூது வந்த நிலையில் அவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அதன் பிறகு சில பந்துகளை மட்டுமே சந்தித்த சுப்மன் கில் ரிட்டர்யட் ஹர்ட் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது களத்தில் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் விளையாடுகின்றனர். தற்போது உள்ள ஸ்கோரை பார்க்கும்போது இந்திய அணியின் ஸ்கோர் 350ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran