இந்தியா, வங்கதேசம், இலங்கை! முத்தரப்பு கிரிக்கெட் போட்டி எப்போது?
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய அணிகள் மோதும் ‘நிதாஹாஸ் டிராபி’ முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதாகவும், இந்த போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுதந்திரம் அடைந்து 70 வருடங்கள் முடிவடைவதை அடுத்து இந்த போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு மார்ச் 15-ந்தேதி முதல் மார்ச் 30-ந்தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டிகளின் அட்டவணை வெகுவிரைவில் வெளியாகும் என்றும் இந்த போட்டியில் இரண்டு இறுதிப்போட்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.