1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2017 (20:42 IST)

நாளை இரண்டாவது ஒரு நாள் தொடர்: பீதியில் இலங்கை அணி!!

விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நாளை இரண்டாவது ஒரு நாள் போட்டி நடக்கவுள்ளது.


 
 
5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், முதல் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2 வது போட்டி நாளை மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
 
நாளைய ஆட்டத்தை வென்று 2 வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இருக்கிறது இந்திய அணி.
 
டெஸ்ட் போட்டியிலும், முதல் ஒரு நாள் போட்டியிலும் தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது இலங்கை அணி. 
 
முன்னதாக, இலங்கை வீரர்கள் தொடர் தோல்வி காரணமால தங்கள் நாட்டு ரசிகர்களாலேயே சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.