செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 13 மார்ச் 2020 (18:16 IST)

இந்தியா - தென்னாப்ரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடர் ரத்து

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டது. இதனை அடுத்து சமீபத்தில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலா என்ற இடத்தில் முதல் ஒருநாள் போட்டி நடக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மழை காரணமாக இந்த போட்டியில் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மார்ச் 15ஆம் தேதி லக்னோவிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி மார்ச் 18ம் தேதி கொல்கத்தாவிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்த இரண்டு போட்டிகளிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தொலைக்காட்சி மற்றும் செயல்களில் மட்டுமே இந்த போட்டியை பார்த்து ரசிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு போட்டியில் கூட விளையாடாமல் நாடு திரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது