செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (18:24 IST)

தோல்வி அடையும் நிலையில் நமீபியா: 2வது இடத்தில் ஆப்கானிஸ்தான்?

தோல்வி அடையும் நிலையில் நமீபியா: 2வது இடத்தில் ஆப்கானிஸ்தான்?
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போட்டியில் நமீபியா தோல்வியடையும் நிலையில் உள்ளது 
 
இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் இன்று வெற்றி பெற்றால் பி பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. பி பிரிவில் பாகிஸ்தான் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் அணி இன்று வெற்றி பெற்றால் மூன்று போட்டிகளில் 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று நடைபெறும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் மூன்றாவது இடத்தில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்களுக்கு மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் தகுதி இருப்பதால் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்