செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (19:29 IST)

டிராவில் முடிந்த ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் போட்டி!

டிராவில் முடிந்த ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் போட்டி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெற்று முடிந்து விட்டது என்பதும் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், டி20 போட்டியில் இந்தியாவும் தொடரை வென்றது என்பதும் தெரிந்ததே 

 
இந்த நிலையில் விரைவில் இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதும் பயிற்சி போட்டி இந்தியா கலந்துகொண்டது 
இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 194 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 386 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலியா ஏ அணி முதல் இன்னிங்சில் 108 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தாலும் 2-வது இன்னிங்சில் அபாரமாக விளையாடி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்தது இதனை அடுத்தே இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது
 
இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவின் விஹாரி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும், ஆஸ்திரேலிய அணியின் மெக்டெர்மொட் மற்றும் வைல்டர்மத் ஆகிய இருவரும் சதமடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது