1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 9 ஜனவரி 2021 (10:06 IST)

கடைசியில் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள் – 244 ரன்களுக்கு ஆல் அவுட்!

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று முதல் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்கள் குவித்துள்ளது. ஸ்மித் 131 ரன்களும் லாபிசாஞ்சே 91 ரன்களும், புல்வோஸ்கி 62 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

அதன் பின்னர் முதல் இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் கில் நிதானமான ஆட்டத்தை தந்தனர். ஆனாலும் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தன. இந்திய அணியின் சுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகியோர் மட்டுமே அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆல் அவ்ட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 94 ரன்கள் பின் தங்கியுள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் அந்த அணியின் பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.