வெள்ளி, 31 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: ஞாயிறு, 19 மார்ச் 2023 (15:59 IST)

117 ரன்களுக்கு சுருண்ட இந்தியா.. கடைசி 9 பந்துகளில் 3 விக்கெட்..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் எந்த போட்டியில் இந்திய அணி 117 ரன்களுக்கு சுருண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய போட்டிகள் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது 
 
முதல் ஓவரிலேயே சுப்மன் கில் விக்கெட் விழுந்து விட அதனை அடுத்து ஐந்தாவது ஓவரில் ரோகித் சர்மா விக்கெட் விழுந்தது. அதன் பின்னர் சூரியகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா என அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்ததால் இந்திய அணி பேட்டிங் திணறியது.  இதனை அடுத்து 26 ஓவர்களில் 117 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டம் இழந்தது
 
ஆஸ்திரேலியா அணியின் ஸ்டார்க் மிக அபாரமாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அபார்ட் 3 விக்கெட்டுகளையும் நாதன் எல்லிஸ் 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினார்கள். 
 
இந்த நிலையில் 118 என்ற எளிய இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva