1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (20:11 IST)

டெஸ்ட் தொடரில் விளையாட ஜடேஜாவிற்கு தடை: ஐசிசி அதிரடி!!

இலங்கை சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இது வரை இரண்டு டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக விளையாடி முடித்துள்ளது.


 
 
இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய வீரர் ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த டெஸ்ட் போட்டியில், பேட்ஸ்மென்னை மிரட்டும் வகையில், பீல்டிங் செய்த பந்தை வீசினார். இதனையடுத்து ஐசிசி 3 வது டெஸ்ட் போட்டியில் விளையாட, ஜடேஜாவுக்கு தடை விதித்துள்ளது. 
 
ஏற்கெனவே, டெஸ்ட் போட்டியில் தடை விதிக்கப்பட்டு, தற்போதுதான் மீண்டும் ஜடேஜா விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.