செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (13:59 IST)

தோனியிடமிருந்து அந்த பழக்கத்தை கற்றுக்கொண்டேன் - ரோகித் ஷர்மா

இக்கட்டான சூழ்நிலைகளில் சரியாக முடிவெடுப்பதை தோனியிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன் என ரோகித் ஷர்மா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் ரோகித் ஷர்மா கேப்டன் பதவிக்கு பொறுப்பேற்றார். கேப்டன் என்ற முறையில், ரோகித் ஷர்மா இந்திய அணியை சிறப்பாக விழிநடத்தி கோப்பையை கைப்பற்றினார். வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இதுகுறித்து பேசிய அணியின் கேப்டன் ரோகித், போட்டியில் கேப்டன் மீது அதிக பிரஸ்ஷர் இருக்கும். அணியை வெற்றியை நோக்கி எடுத்து செல்வதில் கேப்டனுக்கு தான் முக்கிய பங்கு. இக்கட்டான சூழ்நிலைகளில் எடுக்கும் முடிவு தான் அணியை வெற்றி பெற செய்யும். அது சரியான முடிவாக இருக்க வேண்டும்.
நான் இக்கட்டான சமயங்களில் சரியாக முடிவெடுக்கும் திறனை தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டேன். போட்டியில் பதற்றம் ஏற்பட்டாலும், அதனை தோனி தனது முகத்தில் காட்டிக்கொள்ள மாட்டார். மாறாக கூலாக இருப்பார். அதுவே வெற்றியை பெற்றுத் தரும். தோனியிடம் ஏராளமான போட்டி நுணுக்கங்களை கற்று இருக்கிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர் என ரோகித், தோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.