மனிஷ் பாண்டே மற்றும் ஹர்திக் பாண்டியாவை வறுத்தெடுத்த சேவாக்!

Last Updated: சனி, 24 ஜூலை 2021 (17:51 IST)

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஷேவாக் மனிஷ் பாண்டே மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகிய இருவருக்கும் இனிமேல் எளிதாக வாய்ப்புக் கிடைக்காது எனக் கூறியுள்ளார்.

இந்தியாவின் பி டீம் என சொல்லப்பட்ட ஷிகார் தவான் தலைமையிலான அணி இலங்கையில் ருத்ர தாண்டவம் ஆடி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தது முக்கியக் காரணம் என சொல்லப்படுகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மனிஷ பாண்டே மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகிய இரு மூத்த வீரர்களும் ஜொலிக்கவில்லை.

இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ‘அவர்கள் இருவரின் ஆட்டமும் மிகவும் வேதனை அளித்தது. அதிலும் மனிஷ் பாண்டே மூன்று போட்டிகளிலும் விளையாடினாலும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் இனிமேல் அணிக்குள் சாதாரணமாக இடம் கிடைக்காது’ எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :