வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 2 டிசம்பர் 2020 (15:51 IST)

கோலிக்கு எந்த அழுத்தமும் இல்லை… முன்னாள் வீரர் ஆதரவு!

கேப்டன் பதவியால் கோலிக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று  இந்திய முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோற்று தொடரை இழந்தது. இதையடுத்து முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் வழக்கம் போல கேப்டன் கோலியை விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளார். அவரால் அணியை சரியாக வழிநடத்த முடியவில்லை என விமர்சனம் வைத்துள்ளார்.

கம்பீரின் விமர்சனம் குறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங் ‘கேப்டன் பதவியால் கோலி எந்தவித அழுத்தத்திலும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவருக்கு சவால்கள் பிடிக்கும். கேப்டன் பொறுப்பு அவர் ஆட்டத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஒருவரால் மட்டுமே நன்றாக விளையாடி ஆட்டத்தை வெல்ல முடியாது.அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாண்டு கோலியின் சுமையை குறைக்க வேண்டும். ’ எனக் கூறியுள்ளார்.