வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 8 மார்ச் 2020 (15:19 IST)

என் பேட்டை திருடியது யார்? சிஎஸ்கே வீரர் டுவிட்டரில் எச்சரிக்கை

ஐபிஎல் திருவிழா இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கவிருக்கும் வேலையில் சிஎஸ்கே வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தல தோனி உள்பட ஒருசிலர் வீரர்கள் பயிற்சி எடுத்து வரும் நிலையில் இன்னும் ஒருசில வீரர்கள் விரைவில் பயிற்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
இந்த நிலையில் மும்பையில் இருந்து சென்னைக்கு சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் அவர்கள் நேற்று விமானம் மூலம் வந்துள்ளார். அவர் இண்டிகோ விமானத்தின் மூலம் சென்னை வந்து கொண்டிருந்தபோது அவரது பேட்டை யாரோ திருடி விட்டதாக தெரிகிறது
 
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். பேட்டை திருடிய நபர் தயவு செய்து உடனடியாக என்னுடைய பேட்டை கொண்டு வந்து கொடுத்து விடுங்கள். இல்லையேல் அவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையை அணுகுவேன்’ என்று அவர் தனது டுவிட்டரில் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கையை அடுத்து அவருக்கு அவருடைய பேட் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்