வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2017 (23:17 IST)

தோல்வி மேல் தோல்வி: விராத் கோஹ்லிக்கு சோதனை மேல் சோதனை

தோனிக்கு பிறகு இந்திய அணியை  வெற்றிகரமாக நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராத் கோஹ்லியின் தலைமையிலான பெங்களூர் அணி தோல்வி மேல் தோல்வி அடைந்து கிட்டத்தட்ட ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது.



 


இன்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் விராத் கோஹ்லியின் பெங்களூர் அணி மீண்டும் படுதோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி வழக்கம் போல் சொதப்பலான பேட்டிங் காரணமாக 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 135 என்ற எளிய இலக்கை விரட்டிய குஜராத் 13.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

பெங்களூர் அணி தற்போது 9 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் தோல்வி அடைந்து வெறும் 5 புள்ளிகள் மட்டுமே பெற்று 7வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது சந்தேகமே.