1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 8 மே 2017 (06:05 IST)

ஆம்லாவின் அதிரடி சதம் வீண்: சொந்த மண்ணில் தோல்வி அடைந்த பஞ்சாப்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 47வது போட்டி நேற்று பஞ்சாப் மாநிலத்தின் மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் மோதின



 




இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச முடிவெடுத்ததால் பஞ்சாப் அணி முதலில் களம் இறங்கியது. முதல் ஓவரிலேயே குப்தில் ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஆம்லா, அதிரடியாக விளையாடி 60 பந்துகளில் 104 ரன்கள் அடித்தார். அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் மார்ஷ் 58 ரன்கள் அடித்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது.

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி கேப்டன் ஸ்மித்தின் பொறுப்பான ஆட்டத்தால் 19.4 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. ஸ்மித் 74 ரன்களும், ரெய்னா 39 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியால் குஜராத் 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் 5வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.