1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 29 ஏப்ரல் 2023 (15:05 IST)

இன்றைய போட்டி குஜராத் vs கொல்கத்தா: டாஸ் வென்ற ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி முடிவு..!

hardik
கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று 39 வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. 
 
இன்றைய போட்டியின் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
புள்ளி பட்டியலை பொருத்தவரை குஜராத் அணி 10 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதும் கொல்கத்தா அணி 6 புள்ளிகள் உடன் 7வது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran