அதிரடி ஆட்டக்காரர்களுக்கு ஒப்பந்த முறையில் போட்டிகள்! – கங்குலி திட்டம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர்களுக்கு ஒப்பந்த முறையில் போட்டிகள் நடத்த முயற்சித்து வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டிகள் நவம்பர் 22ம் தேதி முதல் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் இதை பகல்-இரவு ஆட்டமாக அமைக்கலாம் என இந்தியா முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து சம்மதம் கேட்பதற்காக வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு ஒப்புதல் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பிசிசிஐ தலைவர் கங்குலி ’இரவு-பகல் ஆட்டமாக நடத்த வங்கதேசத்திடம் ஒப்புதல் கேட்டுள்ளோம். அவர்கள் இதற்கு ஒத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறோம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்’ என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் ‘இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்தமுறையை அமல்படுத்துவது குறித்து முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.