வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2018 (13:39 IST)

வாழ்நாளில் பேட்டையோ பந்தையோ தொடாதவர்கள் கிரிக்கெட் நடத்துகிறார்கள் - அசாரூதின்

கிரிக்கெட்டை பற்றி தெரியாத இவர்கள் கிரிக்கெட் அமைப்பை நடத்துகிறார்கள் என்றும் அவர்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட பந்தையோ பேட்டையோ தொட்டது இல்லை என்றும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாரூதின் குற்றம்சாட்டியுள்ளார்.

 
ஐதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் சங்க சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதின் வந்தார். ஆனால் அவரை ஒருமணி வெளியே காத்திருக்க வைத்து பின்னர் உள்ளே அனுமதித்துள்ளனர். கூட்டம் நிறைவடைந்த பின் செய்தியாளர்களை சந்தித்தவர் கூறியதாவது:-
 
போட்டிகளில் விளையாட லட்சக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என வீரர்கள் புலம்புகிறார்கள். ஆசை மற்றும் கற்பனைகளால் நீங்கள் ஒரு நிறுவனத்தை இயக்க முடியாது. இந்த அமைப்பு 1932ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களை அதிகரிக்க எனது உறுப்பினர் சேர்க்கைக்கு மற்ற உறுப்பினர் ஆதரவு சேவை.
 
கிரிக்கெட்டை பற்றி தெரியாதவர்கள் கிரிக்கெட் அமைப்பை நடத்துகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறை கூட பேட்டையோ, பந்தையோ தொட்டது இல்லை. எனது உறுப்பினர் சேர்க்கைக்கு மற்ற உறுப்பினர்கள் உதவி செய்தால் நான் உங்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் என்று கூறினார்.