பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியில் கண்தானம் செய்த கிர்மானி
இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணியினர், 5வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளனர். இதற்காக பெங்களூருவில் உள்ள பயிற்சி மையத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சையது கிர்மானி நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்கினார்.
அப்போது கிர்மானி கூறுகையில், 'நான் என் கண்களை தானம் செய்துள்ளேன். நீங்களும் உங்கள் கண்களை தானம் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஒருசில மதத்தினர் உடலுறுப்புகளை தானம் செய்வதில்லை. அது அவர்களது மதக்கோட்பாடாக கருதுகின்றனர்.
என்னுடைய கருத்தால் அவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏறபட வேண்டும் என்றே இதனை இந்த இடத்தில் தெரிவிக்கின்றேன். கண்தானம் செய்வதன் மூலம் இந்த கிரிக்கெட் வீரர்கள் பார்வை பெறும் வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்தார்.