அவர் போல இவரா? இல்லை இவர் போல அவரா?
ஈரானில் கால்பந்து வீரரான லயோனல் மெஸ்சி போலவே உருவமைப்பு கொண்ட ஒருவர் உலா வருகிறார்.
அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி. சிறந்து கால்பந்து வீரருக்கான விருதை நான்கு முறை வென்றுள்ளார். மேலும், கால்பந்து அரங்கில் பல்வேறு சாதனைக்கு சொந்தக்காரர்.
இந்நிலையில், ஈரானின் மாணவரான ரீசா பராதீஸ், மெஸ்சியின் ஜெராக்ஸாக உள்ளார். சமீபத்தில் மெஸ்சியைப்பற்றி செய்தி வெளியிட்ட போது மெஸ்சியின் படத்துக்கு பதிலாக பராதீஸ் படத்தை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.