வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 ஜூன் 2021 (11:31 IST)

இன்று தொடங்குகிறது ஈரோ உலக கோப்பை கால்பந்து! – முதன்முறையாக தமிழ் வர்ணனை!

உலக புகழ்பெற்ற ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று தொடங்கும் நிலையில் முதன்முறையாக தமிழ் வர்ணனை ஒளிபரப்பாக உள்ளது.

உலக புகழ்பெற்ற ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 24 நாடுகளின் அணிகள் இடம்பெறும் இந்த போட்டிகள் 6 க்ரூப்பாக பிரிக்கப்பட்டு 3 மேட்ச் டேவாக நடைபெறுகிறது. கடந்த ஆண்டே நடந்திருக்க வேண்டிய இந்த போட்டி கொரோனாவால் தாமதாமாக இந்த ஆண்டில் நடக்கிறது.

முந்தைய 2016ம் ஆண்டு ஈரோ உலகக்கோப்பை போட்டியில் பிரான்ஸ் நாட்டு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் இன்று இந்திய நேரப்படி இரவு 12.30 மணியளவில் முதல் போட்டி துருக்கி – இத்தாலி இடையே நடைபெற உள்ளது. இரண்டாவது போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணியளவில் வேல்ஸ் – ஸ்விட்சர்லாந்து இடையே நடைபெறுகிறது.

முதன்முறையாக ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தமிழ் வர்ணனையில் வெளியாக உள்ளன. சோனி டென் 4ம் சேனலில் இந்த போட்டிகளை தமிழில் ஒளிபரப்ப உள்ளார்கள்.