செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (17:56 IST)

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு!
இந்த கொரோனா வைரஸ் பரபரப்பு காலத்திலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவதை பார்த்து வருகிறோம். இங்கிலாந்து நாட்டில் கொரோனாவின் கோரப்பிடியில் சற்று தளர்ந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அதன்பின் அயர்லாந்து அணியுடன் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணி, தற்போது பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது என்பதும், முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த ஐந்தாம் தேதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வரும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் சுற்றுப்பயணம் செய்து விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான முறையான அறிவிப்பும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து இங்கிலாந்து அணி இந்திய சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளது 
 
இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஜனவரி - மார்ச் மாதங்களில் சுற்றுப்பயணம் செய்யும் என்றும் இதற்கான தேதிகள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் பிசிசிஐ இணைந்து விரைவில் அறிவிக்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது